An infusion to help relieve indigestion and fever(ஜீரணக் குறைபாடு மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும் கசாயம்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

An infusion to help relieve indigestion and fever(ஜீரணக் குறைபாடு மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும் கசாயம்)


ஜீரணக் குறைபாடு மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும் கசாயம்.
-----------------------------------
லவங்கப்பத்திரி (பிரியாணி இலை) மிளகு  கசாயம்
----------------------------------------------
தேவையான பொருட்கள்
--------------------------------------
லவங்கப் பத்திரி.    -  2 கிராம்
மிளகு.                       -  10 
திப்பிலி.                    -   5
பனைவெல்லம்.      -  20 கிராம்
செய்முறை
-------------------------------------
முதலில்  லவங்கப்பத்திரி , மிளகு , திப்பிலி இவை மூன்றையும் சுத்தப்படுத்தி ஒன்றாக சேர்த்து நசித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் நசித்து வைத்துள்ள
பொருட்களையும் , பனைவெல்லத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிக்க வைத்து 300 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும். 
பயன்கள்
--------------------
இந்தக் கசாயம்  ஜீரணக் குறைபாடு மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும் அருமருந்தாகும்.
ஜீரணக் குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கசாயத்தை   தயார் செய்து காலை  மற்றும் மாலை என இரண்டு வேளையும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வேளை என இரண்டு நாட்களுக்கு குடித்து வரவும்.
நன்றி வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment