வயிற்றுக்கடுப்பை போக்கும் கடுக்காய் கொட்டை!(BABY AND CHILDREN HEALTH TIPS) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

வயிற்றுக்கடுப்பை போக்கும் கடுக்காய் கொட்டை!(BABY AND CHILDREN HEALTH TIPS)




* வயிற்றுக்கடுப்பை போக்கும் கடுக்காய் கொட்டை! *


குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்த்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமாள்களை வசசிக்கிடணும். இப்போ குழந்தைகளுக்கான வைத்தியத்தைத் தெரிஞ்சுக்குங்க.

குழந்தைகளின் வாந்தி நிற்க... வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை 
வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடனும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுவ 20வருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா. செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.

வாந்தி நிக்க இன்னொரு வைத்தியமும் இருக்கு ஒரு துண்டு வசம்பை நெருப்புல கட்டு, கருக்கி, அதை ஒரு தேய் தேய்ச்சு, தேன்ல குழப்பி, ரெண்டு, மூணு முறை குழந்தைங்க நாக்குல தடவினா வாத்தி தின்னு, முழு குணம் கிடைக்கும்.

வயிற்று உப்புசம் குணமாக. சுக்கு, சீரகம், சிறுபுள்ளடி (தரையில் படரும் செடி) எல்லாத்தையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நகக்கி, தாய்ப்பால் ஊற வைச்சுப் பிழிஞ்சிக்கணும் இதை அரை பாலாடை அளவுக்கு எடுத்து, ஒருமுறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகிடும்.
சிறுசா ஒரு துண்டு பிரண்டைய எடுத்து, அது மேல் உப்பைத் தடவி, ஒரு ஓட்டுல வச்சி தீயில் காட்டுளா, 'படபட'னு வெடிக்கும். இதை ஒரு டம்ளர் தண்ணியில போட்டு வச்சுக்கணும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமா இருக்கிறப்ப இந்தத் தண்ணியில அரை பாலாடை கொடுத்தா, நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு நிற்க...

சமையலுக்கு உபயோகிக்கிற மஞ்சனை ஒரு கணு (துண்டு) எடுத்துத் தூளாக்கி, சூடு பண்ற கரண்டி.. இல்லேன்னா கடாயில் போட்டு வறுத்தா, தீ மாதிரி ஆயிரும். இதுல அரை ஸ்பூன் ஓமத்தைத் தூவினா அது வெடிக்கும் உடனே அரை டமனர். தண்ணி ஊத்திக் காய்ச்சி, வடிகட்டி,இதுலருந்து அரை பாலாடை அளவுத் தண்ணிய ஒருமுறை கொடுத்தாலே வயிற்றுப்போக்கு சரியாகிடும்.

வயிற்றுக்கடுப்பு நீங்கூ.

தாய்ப்பால்ல கடுக்காய்க் கொட்டையை இழைச்சி அரை

பாலாடை வீதம் கொடுத்துட்டு வந்தா, வயிற்றுக்கடுப்போட கூடிய

பேதி சரியாகிடும்

No comments:

Post a Comment