* உடைஞ்ச எலும்பை ஒட்ட வைக்கும் பிரண்டை! *
பிரண்டை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. அது எந்தெந்த நோய்களை குணப்படுத்துதுனு முன்னமே சொல்லி இருக்கேன். இருந்தாலும் தெரியாத சில விஷயங்களைச் சொல்றேன், கேட்டுக்கோங்க.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி, துவையல் செஞ்சு, வாரம் ரெண்டு தடவை சாப்பிட்டு வந்தா... உடம்புல பலம் சேரும், "எனக்கு பசியே எடுக்குறதில்லட்று சொல்றவங்க. பிரண்டைத்துவையலச் சாப்பிட்டா... கம்மா 'கபகப்'னு பயெடுக்கும். ஜீரணக்கோளாறு, வாயுக்கோளாறால அவதிப் படுறவங்களுக்கும் இது அருமருந்து. ரத்தமூலத்தை குளனப் படுத்தறதோட, அதனால வர்ற புண்ணையும் சுகமாக்கற சக்திகூட பிரண்டைத்துவையலுக்கு உண்டு. சூடான சாதத்தோட பிசைஞ்சு சாப்பிட்டா தேவாமிர்தமா இருக்கும். வலி, களுக்கு உள்ள இடத்துல
பிரண்டையை பூசலாம். நல்லா
மையா அரைச்சி அதோடபுளி, கல் உப்பு சோத்து
தண்ணி விட்டு காய்ச்சணும், குடுகொஞ்சம் ஆறினதும் பாதிப்பு உள்ள இடத்துல பூரீட்டுவந்தீங்கன்னா நல்ல பலன் கிடைக்கும்.கை கால் உடைஞ்சி, எலும்புமுறிவு ஏற்பட்டா. பிரண்டை யுனி, உப்பு:சேர்த்து மையா அரைச்சி,கொஞ்சம்குடு பண்ணி, அதை எலும்பு முறிஞ்ச இடத்துல வச்சு கட்டினா.. வலியும், வீக்கமும் படிப்படியா குணமாகும். எலும்பு உடைஞ்சிருந்தாலும் சீக்கிரமா ஒண்ணு சேர்ந்திரும். முதுகுவலி, இடுப்புவலிக்குக்கூட இந்த வைத்தியம் கைகொடுக்கும்கறதையும் மளகல வச்சுக்கோங்க!
தூதுவளை இலைகளைப் பறிச்சி சுத்தம் பண்ணி.. மிளகு. சின்ன வெங்காயம், பூண்டு, புளி, கொஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கி, துவையல் செஞ்க, ஒரு மண்டலம் சாப்பிட்டா
உடம்புல பலம் ஏறும். அதோட இருமல், சளி, ஆஸ்துமானு மூச்சு சம்பந்தப் பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வும் கிடைக்கும்.
தாதுவிருத்தி பிரச்னை உள்ளவங்க இந்தத் தூதுவளைக்கீரையைச்
சாப்பிட்டா. நிச்சயம் பலன் கிடைக்கும். தூதுவளைப்பூவுக்கும்
கூட அதே மகத்துவம் உண்டு. அந்தப் பூவை நிழல்ல உலர்த்தி. பொடியாக்கி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தாலும்... தாதுவிருத்தி அடையும்,
இந்தக் கீரையில் கால்சியம் சத்து அதிகமா இருக்கறதால் அடிக் கடி சாப்பிட்டா. எலும்பு பலப்படும். தாதுவளையை பருப்புகூட சேர்த்து சமைச்சி நெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டா.. எலும்புல பலம் சேரும். தாதுவளைக் காயை சமைச்சோ, வத்தல் செஞ்சோ, ஊறுகாய் செஞ்சோ சாப்பிட்டா.. கண்ணுல பித்த நீர் வடியுறது, கண் நோய் இதெல்லாம் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, பலவிதமான நோய்களும் தம்மகிட்ட எட்டிப் பாக்காது.
No comments:
Post a Comment