அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்! ( brinjal home remedy ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்! ( brinjal home remedy )

அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்!

சீஸனுக்கு தக்குனபடி காய்கள் காய்க்கற மாதிரியே..நோய்களும் மொளைக்றதுதான் வாடிக்கை கூடுமானவரைக்கும் உஷாரா இருந்துட்டா... அதையெல்லாம் கிட்ட வராமலே தடுத்துட முடியும் அதையும் மீறி வந்துட்டா... கவலையை விடுங்க அதுக்குத்தான இருக்கேன் இந்தப் பாட்டி
வெயில்ல அலையுறதுனால உடம்புல கொப்புளம், எரிச்சல், வேர்க்குரு வரும். இதுக்கெல்லாம் நல்ல மருந்து... சந்தனம், சந்தனக் கட்டையைத் தண்ணி ஊத்தி நல்லா இழைச்சி (உரசி) வேர்க்குரு வந்த இடத்துல பூசி விடுங்க. பகல் வேளையில புங்கை மரத்தடியில போய் உட்கார்ந்துட்டு வாங்க. இல்லைனா.. ஒரு குட்டித் தூக்கம் போடுங்க. குளுகுளுனு இருக்கும். சூடு தனிஞ்சு உடம்புல வர்ற கொப்புளம், எரிச்சல், வீக்கம் எல்லாம் வத்திப்போயிரும். வேற ஏதாவது அலர்ஜியினால நோய் வந்திருந்தாகூட குணமாயிரும்.

அகத்திக்கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, பொள்ளாங்கண்ணிக் கீரைனு வகை வகையா சாப்பிட்டா.. கோடைக்கே உரிய நோய்கள் குணப்படும். வேற சில நோய்களையும் கூட இந்தக் கீரைங்க அண்ட விடாது.

உதாரணத்துக்கு அகத்திக் கீரையை எடுத்துக்கிட்டாட வாய்ப்புண்.

வயித்துப்புண் குணமாகறதோட, குடும் தணியும். மத்தியான சாப்பாட்டோட அகத்திக் கீரை சேர்த்துக்கிட்டீங்கன்னா... மறுநாள் காலையில் தாராளமா மலம் போகும். குழந்தைங்க எலும்பு உறுதியாகுறதுக்கும், உடல் வளர்ச்சி அடையவும் அகத்திக்கீரை ரொம்ப நல்லது. ஏன்னா... இதுவ கண்ணாம்புச்சத்து இருக்கு
அகத்திக் கீரையால புத்தி மந்தம், சோம்பேறித்தனம்கூட சரியாகும். அகத்திக்கீரையை
கூட்டு, பொரியல்னு செஞ்சு சாப்பிடலாம். பருப்போட சேர்த்தும் சாப்பிடலாம். சூப் போட்டும் குடிக்கலாம்.

அகத்திக்கீரை சாப்பிடும்போது இறைச்சி சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டா... சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். அதுமட்டுமில்ல... மருந்துகளோட வீரியத்தையும் அகத்திக்கீரை கொறைச்சிரும்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்கறதுல பூசணிக்காயும் முக்கியமானது. பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டா உடல்வலி தீரும், சிறுநீர் வியாதிகள் குணமாகும், உடல் குட்டைத் தணிக்கும். வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்த கத்தியாகும்.

நாட்டு வைத்தியத்துல பூசணிக்காயின் விதைகளையும் பயன்படுத்துவாங்க. பூசணிக்காய் விதைங்கள காய வச்சி பொடியாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து பாலுல கலந்து சாப்பிட்டு வந்தா உடம்பு பெருக்கும். உட குட்டையும் தணிக்கும்.

No comments:

Post a Comment