சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்குத் தீர்வு!
நேரத்துக்கு சாப்பிடாம இருந்தாலும் தலை வலிக்கும். வெயில்ல அலைஞ்சுட்டு வீட்டுக்குள்ள நொழைஞ்சதும் ஐஸ் தண்ணிய எடுத்து மடமடனு குடிச்சாகூட சிலருக்கு தலை வலிக்கும். இன்னும் சில பேருக்கு ஜலதோஷம் தொடங்குற நேரத்துல தவை வலிக்கும். இப்பிடி எல்லாம் தலைவலி பல ரூபத்துல வரும்.
தலைவலினு தெரிஞச ஒடனே சுக்கை எடுத்து, கொஞ்சம் தண்ணி விட்டு இழைச்சி (உரசி) நெற்றிப்பொட்டுல களமா பத்து போடுங்க, கொஞ்சம் தகதகனு எரியும். கொஞ்சம் நேரத்துவ தலைவலி வந்த எடம் தெரியாம பஞ்சா பறந்துரும்.
ஓமவல்லி இலையை எடுத்து சாறு பிழிஞசு, அதோட கொஞ்சம் நல் லெண்ணெய்,சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றிப்பொட்டுல பத்து போட்டா. தலைவலி சரியாப் போயிரும். மல்லிகைப்பூவை தலையில் வெச்சுக்கற பொண்ணுங்களுக்கு தலைவலி வராது வந்தாலும் கொஞ்ச நேரத்துவ சரியாயிரும். ஆம்பளைங்களுக்கு தலைவலினா... மல்லிகைப்பூலை தலையணைபில் வெச்சு தூங்கினா.. சரியாகிமும்.
நாலு மிளகை தண்ணி விட்டு அரைச்சு, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெத்தியில பத்து போட்டா... தலைவலி சரியாயிரும்.
சிலருக்கு சைனஸ் காரணமாகூட தலைவலி வரும். அப்படிப்பட்டவங்க ராத்திரி தூங்குறப்ப.. தலையணையில நொச்சி இலையை வெச்சு தூங்கினா.. நாளடைவுல தலைவலி சரியாப் போகும்.
சைனஸ் குணமாகணும்னா நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நல்லா காய்ச்சி, குடு ஆறினதும் தலைக்கு தேய்ச்சு ஒரு மணி நேரம் கழிச்சு வெந்தீர்ல குளிக்கணும், இதை வாரத்துக்கு ஒருநாள் இல்லைனா ரெண்டு நாளனு ரெண்டு மாசம் வரைக்கும் செஞ்சாலே.. சைனஸ் சரியாப் போயிரும். தலைவலியும் சரியாயிரும்.
இந்த ஒற்றைத் தலைவலி வந்த.. உபிரே போற மாதிரி இருக்கும். வெள்ளை என்னை எருமைப்பால் விட்டு அரைச்சி, முன் நெற்றியில் பத்து போட்டு, குரியன் உதிக்கறப்ப வாற வெளிச்சத்துல் காட்டிட்டு வந்தா-மூணே தாளல ஒற்றைத் தலையவி சரியாப்போயிரும்,
No comments:
Post a Comment