Downy mildew cures anemia!(ரத்தசோகையைக் குணமாக்கும் கீழாநெல்லி!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Downy mildew cures anemia!(ரத்தசோகையைக் குணமாக்கும் கீழாநெல்லி!)

Downy mildew cures anemia!(ரத்தசோகையைக் குணமாக்கும் கீழாநெல்லி!)

நோய்ங்கறது.. யாருக்கு வேணும்னாலும் வரலாம். ஆனா, 'நமக்குப் போய் இப்படி வருதே'னு கஷ்டப்பட்டுக்கிட்டு நிக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. அதுலயும் இந்த வயகப் புள்ளைக இருக்குதே. நோய் வந்தா பெரும்பாலும் வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டு, மருந்து எடுத்துக்கிடாம அப்பிடியே விட்டுருவாங்க காலப்போக்குல அது பெரிய பிரசனைகளைக் கொண்டு வந்து சேர்த்துடும்
உங்க தோய் தொடியைப் பத்தி யாருகிட்டயும் நீங்க கலக்க வேணாம். இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தை சத்தமில்லாம செஞ்சு பாருங்க, நோய் பூரணமா குணமாவிரும்.

இளம் வயது வெள்ளைப்படுதல் குணமாக.. சிள்ள வயகலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப் படுதல் அதிகமாகி பாடா படுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல... அதை வாங்கி, மணசட்டியில் போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயைத் தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ....அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலத்துக்கிடணும், அதுவ கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.
ரத்தசோகை சரியாக...

கீழாநெல்வி

வயசுப் புள்ளைங்க ஒழுங்கா சாப்பிடாம, 'விதியேனு கெடக்குறது தாள் இப்பல்லாம் ஃபேஷனுனு பேசிக்கறாங்க. ஆனா, இதுவே காலப்போக்குல ரத்தசோகை வர்றதுக்குக் காரணமாயிடும். அப்படிப்பட்டவங்களுக்கு கீழாநெல்லிச் சமூலத்தை (வேர் முதல் பூ வரையிலான முழுச் செடி) அரைச்சி, ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பால்ல கலந்து குடிச்சிட்டு வந்தா 10 நாள்ல ரத்தசோகை குணமாகும். தேவைனா தொடர்ந்து சாப்பிடலாம்.

மார்பு பகுதியில் வரும் புண் ஆற...

மார்புல சில பொண்ணுங்களுக்கு புண் வந்து பாடாபடுத்தும். அதுக்கும் கைவசம் மருந்து இருக்கு காசுக்கட்டி 5 கிராம் அளவு எடுத்து, சுத்தமான தண்ணியில கரைச்சி, புண் வந்த இடத்துல தடவிட்டு வந்தா ரெண்டு, மூணு நாள்ல ஆறிகும். நல்லா குணமாகுற வரைக்கும் மருந்து போடலாம். தப்பில்ல.
முக வறட்சி விலக..
குங்குமப்பூ - அரை கிராம், சந்தன பவுடர் - 10 கிராம், மஞ்சள்தூள் - 5 கிராம், நெல்லிக்காய் கந்தகம் - 1 கிராம்... இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும். அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி, 15 கிராம் வெண்ணெயில அதை குழைச்சி, கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி வச்சிக்கிடணும். அதுவ ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி, ராத்திரி முகத்துல தேய்ச்சிட்டு வந்தீங்களா.. அழுக்கு வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய், முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெல்லாம் இதைச் செய்யலாம்.

முகப்பரு வில...

கடலை மாவை விளக்கெண்ணெயில கலந்து முகப்பருவுல பூசி ஒரு மணி நேரம், இல்லைனா ரெண்டு மணி நேரம் கழிச்சி குளிச்சிட்டு வந்தீங்களா. பரு மாயமா மறஞ்சிரும்.

No comments:

Post a Comment