Garbage mani bath to get rid of skin disease!(தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Garbage mani bath to get rid of skin disease!(தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!)


Garbage mani bath to get rid of skin disease!(தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!

இந்த அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா.. உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்குக் கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவண்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக்கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு அதுல ஒண்ண எடுத்துவிடறேன். தெரிஞகக்கோங்க!

தவகமுருங்கை இலையை (பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க) ஒரு கைப்பிடி எடுத்து இடிங்க. அதுவ கிடைக்கற சாறை குடிச்சா... அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும்.
மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம். அதை மறந்துட்டு, புளிக்குழம்பு, புளிசாதம்னு மூக்குப்பிடிக்க வெட்டிப்புட்டு, நோய் குணமாகலையேனு இந்தப் பாட்டியைத் திட்டித் தீர்க்கக் கூடாது.

பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும் தாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில் தெரியற இடத்துவயெல்லாம் கூட பட்டை பட்டையா- சொறி சொறியா.. முனைச்சு உயிரை எடுக்கும். இதையெல்லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம்

அருகம்புல் ஒரு கைப்பிடி. மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்லா குணமாவது தெரியும்.
குப்பைமேனி இலை (வீட்டு ஓரங்களில் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிற இலைகளுடன் காணப்படும் செடி) ஒரு கைப்பிடி. மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு. கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சு, அரிப்பு கண்ட இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளியல் போடணும். இதைத் தொடர்ந்து செய்துகிட்டு வந்தா... ஊறல், படை எல்லாம் ஓடிப்போயிரும். குணம் தெரிஞகட்டா- மருந்தை கை விட்டுடலாம். பக்க விளைவுங்கற பேச்சுக்கே இடமில்ல. காலை நேரத்துல உடம்புல பூசி குளிச்சா நல்லது,
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க, அதோட மூணு சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சி உடம்பு முழுக்க பூசி, அரை மணி நேரம் கழிச்சி வெத்தீர்ல குளிச்சாலும், தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு குணம் கிடைக்கும்.
நன்னாரி வேர் (தாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணி சேர்த்து நல்லா காய்ச்சணும், 200 மில்லி ஆனதும் இறக்கிறணும். காலையில் நூறு மில்லி, சாயங்காலம் நூறு மில்லினு குடிசக வந்தா... தோல் தோய், வந்த இடம் தெரியாம ஓடிப் போயிரும்.

No comments:

Post a Comment