காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய்!
இந்தக் காலத்துல தடுக்கி விழுந்தா இப்படிப்பட்ட புலம்பல்கள் கூடிப்போயிருச்சு. -ஆனா, எதுவா இருந்தாலும் இந்தப் பாட்டி வைத்தியம் இருக்குறப்ப எதுக்காக கவலை?
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்னு அட்டவணைப் போட்டுக்கிட்டு சாப்பிட்டு வந்தாலே இந்த மாதிரி நோய்களுக்கு இடமே இல்லை.
இஞ்சி...
இஞ்சியை பல வழிகள்ல் சாப்பிடலாம். சின்னதா ஒரு துண்டு இஞ்சியை காலைல வெறும் வயித்துல சாப்பிடலாம். அப்படி இல்லைனா. இஞ்சிச் சாறு எடுத்து, அஞ்சு நிமிஷத்துக்கு அப்படியே ஒரு டம்ளால வைங்க அடியில வெள்ளையா படியும். தெளிஞ்ச சாறை மட்டும் எடுத்து குடிங்க. ரொம்ப கஷ்டமா தோணுசகளா.. தேன், கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை இதையெல்லாம் அதுகூட சேர்த்துக் குடியுங்க நிந்தமும் இப்படி குடிச்சு வந்தா. நீங்கதான் கறுகறுப்புத் நிலகம்.
இஞ்சி - எலுமிச்சைச் சாறு
இஞ்சி முரப்பா, இஞ்சி மிட்டாய்ஞு விக்கிறாங்க. எல்லாமே நல்லதுதான். இதை எந்த நேரத்துலயும் சாப்பிடலாம். அதேமாதிரி டீ குடிக்குறப்ப... இஞ்சியைத் தட்டிப்போட்டுக் குடிக்கலாம். வாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித்தொல்லைனு எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.
'சுக்கு-மல்லி காபீனு கூவிக் கூவி விக்கிறத பார்த்திருப்பீங்க. சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து எல்லாத்தையும் பொடியாக்கணும். இதோட பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வச்சா... சுக்கு மல்லி காபி ரெடி- சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப்பிடிப்பு எல்லாம் ஓடியேப் போயிரும். ஆடாதொடை இலை, துளசி, ஓமவள்னியெல்லாம் கிடைச்சா. அந்த சுக்குமல்லி காபியோட சேர்த்துக் காய்ச்சிக் குடிச்சா... கூடுதல் பலன் கிடைக்கும்! சுக்கு மிட்டாய்னு ஒண்ணு சில கடைகள் விக்கிறாங்க. அதை வாங்கிக் குழந்தைங்களுக்கு கொடுங்க..உற்சாகமா ஓடி ஆடுவாங்க.
கடுக்காய்...
'மாலையில் கடுக்காய்'னு சொல்றதைவிட, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னனு சொல்லலாம். அந்த நேரத்துல அதைச் சாப்பிடறது தான் நல்லது. நாட்டு மருந்து கடைங்கள்ல கிடைக்கற கடுக்காயை வாங்கிட்டு வந்து, இடிச்சி உள்ள இருக்குற கொட்டையை எடுத்துட்டு தோலை மட்டும் பயன்படுத்தணும், ரெண்டு, மூணு கடுக்காயை இடிச்சிப்போட்டு ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி நல்லா காய்ச்சணும். பாதியா கண்டுளதும், ஆற வெச்சுக் குடிக்கணும். இப்பிடி குடிக்கிறதால காலையில் மலம் நல்லா போகும். வாய்வுத் தொல்லை இருந்த இடம் தெரியாம காயா போயிரும். இதைச் சாப்பிடறதால மூலம் சம்பந்தப்பட்ட பிரச்னைங்ககூட சரியாகும்ளா பார்த்துக்கோங்களேன்,
No comments:
Post a Comment