வயிற்று இரைச்சல் , வயிற்றுப் பொருமல் மற்றும் ஜீரண குறைபாட்டை போக்க உதவும் கசாயம்.
-----------------------------------
முருங்கை ஈர்க்கு கசாயம்
----------------------------------------------
தேவையான பொருட்கள்
---------------------------------------
முருங்கை ஈர்க்கு. - ஒரு கைப்பிடி
நெல்லி ஈர்க்கு. - ஒரு கைப்பிடி
வேப்பிலை ஈர்க்கு. - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை ஈர்க்கு - ஒரு கைப்பிடி
வசம்பு. - 2 கிராம்
தேன். - சிறிதளவு
மஞ்சள் தூள். - இரண்டு சிட்டிகை
செய்முறை
-------------------------------------
முதலில் முருங்கை ஈர்க்கு , வேப்பிலை ஈர்க்கு , நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தப் பட்டுள்ள ஈர்க்குகளையும் அதனுடன் வசம்பு சேர்த்து நன்கு கருக்கவும்.
பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிக்க வைத்து 250 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.
பயன்கள்
--------------------
இந்தக் கசாயம் வயிற்று இரைச்சல் , வயிற்றுப் பொருமல் மற்றும் ஜீரணக் குறைபாட்டை போக்க உதவும் அருமருந்தாகும்.
இந்தக் கசாயத்தை தயார் செய்து அதனுடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால்
வயிற்று இரைச்சல் , வயிற்றுப் பொருமல் மற்றும் ஜீரணக் குறைபாடு முதலியன நீங்கும்.

No comments:
Post a Comment