இருமலை விரட்டும் அதிமதுரம்!
"குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்." என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி. பகுத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான்.நமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள், என்ள வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள். சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள், வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்!
'காசா முக்கியம்? ஜனங்க நோய், நொடி
இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன்முக்கியம்" என்று மனகக்குள்ளிருந்து பேசுகிற அள்ளமேரி பாட்டிக்கு வயது 8.5!
இதோ... உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி!
மழை ஓஞ்சி பனி அடிக்குதில்ல. அந்த வெறுக்கேத்த மருந்து
சொல்றேன்... கவனமா கேட்டுக்கங்க!
குழந்தைகளின் சளிக்கு..
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நகக்கி, சாறெடுக்ணும், இதுல சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல் தடவி வந்தா, சளி
கட்டுக்குள்ள வரும் பிறந்த குழத்தைகள் முதல் 2 வயகக் குழத்தைகள்
வரை இந்த மருந்தைத் தரலாம்.பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு... இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும், 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலத்து, இதுவ பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
இருமல் விலக..
அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில் வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி குடாக்கி கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.

No comments:
Post a Comment