தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகங்களில் மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
* மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம் பூ ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். இதில் ஒரு மாத்திரை வீதம் இருவேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.
ஈளை இருமல் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலைக் காய்ச்சாமல் அதில் சிறிது மிளகையும், மஞ்சள் தூளையும் கலந்து குடித்து வர மூன்று நாளில் குணமாகும்.
* பத்து மிளகை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச் சாறும், கரிசலாங்கண்ணி இலைச் சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உண்ண பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
* மிளகுத் தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சமஅளவு
சேர்த்து அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசி ஒருமணி
நேரம் கழித்த தலைக்கு குளிக்கவும். இதை தொடர்ந்து 48 நாட்கள்
செய்து வா, புதிய தலைமுடி வளரும்.
No comments:
Post a Comment