Scutch grass ( அருகம்புல் ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Scutch grass ( அருகம்புல் )




 

* அருகம்புல்   *


ஆனைமுகக் கடவுளுக்கு ஒருமுறை உடலெங்கும் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது அவர் அருகம்புல்லின் மீது படுத்து அந்த எரிச்சலை தணித்தார். அன்றிலிருந்து அருகம்புல் கணபதியின் அன்புக்கு பாத்திரமானது. மிகுந்த மருத்துவகுணம் கொண்டது.

* அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்ணொண்ணயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து குளிக்கவும், தலையில் உண்டாகும் பேள், பொடுகுத் தொல்லை நீங்கி குளிர்ச்சியாகும். இதே எண்ணயை உடலில் தேய்த்து குளித்தது வர எல்லா வித தோல் நோய்களும் குணமாகும்.

* அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கி சிறுநீர்ப்பை நோய்கள் நீங்கி சிறுநீர்ப்பையும் பலப்படும்.

* அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களைச் சேர்த்து க்ஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்து வர இதய பலவீனம் நீங்கி, இருதயமும் ரத்தக் குழாய்களும் உறுதி பெறும்.

* தீராத வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை

சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு

குடித்து வர குணமாகும்.

* அருகம்புல்லின் கணுக்களை நீக்கி விட்டு 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் வெள்ளை மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும் அதில் சிறிதளவு பசு வெண்ணய் சேர்த்து குடித்து வர் மருந்துகளை உட் கொள்ளுவதால் ஏற்படும் வெப்பம், நீர்கடுப்பு, மூலக் கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment