Spinach to drive away acne!(அக்கியை விரட்டும் தரைப்பசலைக் கீரை!
"உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது.." "ஷ். அப்பப்பா.! இந்த வேகாத வெயில்ல
கடை, கண்ணிக்குப் போய் வர முடியுதா?" வெய்யில் காலத்துல் பார்க்கிற எல்லாருமே இப்படித்தான புலம்புறாங்க?! காணாக குறைக்கு அக்கி, வியாவை. அம்மைனு வேளல்' நோய்கள் வேற வந்து பாடாப் படுத்தும் அதுவ இருந்து விடுபடறதுக்கும், வந்த தோய்ல இருந்து உங்கள் காப்பாத்திக்கிறதுக்கும் சில வைத்தியம் சொல்றேன்... கேட்டுக்கிடுங்க..
அக்கி குணமாக...
தரைப்பசலைக் கீரையை நெல்லிக்காய் அளவு எடுத்து, மையா அரைச்சு, ஒரு ஸ்பூன் வெண்ணெய் எடுத்து அதுல போட்டுக் குழப்பி, அக்கி வந்த எடத்துல பூசணும். காலையில பூசி மதியம் ஒரு மணி அளவுல குளிக்கணும். சோப்புக்குப் பதிலா பச்சைப் பயறு மாவை உபயோகிச்சுக் குளிக்கணும். இப்படி மூணு நாள் செய்துட்டு வந்தாலே அக்கி குணமாகிடும்.
அகத்திக் கீரையை தேவையான அளவு எடுத்து மையா அரைச்சு……… காலையில பூசி மதியம் ஒரு மணிக்கு பச்சைப் பயறு மாவு பூசி குளிக்கணும். தொடர்ந்து மூணு நாளுக்கு இப்படி செஞ்சு வந்தாலும் அக்கி குணமாகிடும்.
சோறு வடிச்ச கஞ்சித் தண்ணிய ராத்திரி நேரத்துல எடுத்து வச்சி காலை நேரத்துல் அக்கி மேல தடவி வரணும். ஏற்கெனவே சொன்னது போல சோப்புக்குப் பதிலா பச்சைப் பயறு மாவு தேய்ச்சிக் குளிக்கணும் தொடர்ந்து மூணு நாள் இப்படி செஞ்சா அக்கி குணமாயிரும்.
பெரியவங்களுக்கு உஷ்ணம் அதிகமாகி அதனால வரக்கூடிய வேனல் கட்டிகளை சரி பண்ணணும்னா. அதுக்கு வேற வைத்தியம் இருக்கு சின்ன வெங்காயம் ரெண்டு. வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து. தண்ணி விடாம அரைச்சுக்கணும். அதை கட்டியோட நுளிப் பகுதியில படாம மற்ற பகுதியில பூசணும், ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் ரெண்டு நாள் பூசி வந்தா கட்டி உடைஞ்சிரும்
.அம்மை வராமல் தடுக்க...
வெந்தயம்
ஒரு வீட்டுல யாருக்காவது அம்மை நோய் வந்திருந்தா, மத்தவங்க உஷாரா இருக்கணும். வேப்பங் கொழுந்து 2 இணுக்கு எடுத்து, அரைச்சு, காலையில வெறும் வயித்துவ மூணு நாள் சாப்பிடணும். இதைச் சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் காலை டிபன் சாப்பிடணும். இப்பிடி செஞ்சா அம்மை நோய் பக்கத்துலயே வராம தம்மைப் பாதுகாத்துக்கிடலாம்.
அம்மை வந்த பின் குணமாக..
பொதுவா அம்மை வந்தா கிராமப்புறங்கள்ல வேப்ப இலையைக் கீழ பரப்பி அது மேல உக்கார வைப்போம். ஏன்னா. வேப்ப இலை நல்ல குளுமை. அதோட, கிருமி நாசினியும்கூட! படுக்கையில்கூட வேப்ப இலையைப் பரப்பி வைக்கலாம். மேலும் வேப்பங்கொழுந்து ஒரு இணுக்கு எடுத்து அரைச்சு, ஒரு நாளைக்கு ஒரு தடவை உள்ளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். ஜவ்வரிசி கஞ்சி, இளநீர், புளிப்பில்லாத நீராகாரத்தையும் கொடுக்கலாம். வேற வைத்தியம் தேவையில்லை.
வேப்பங்கொழுந்து
அம்மை வந்தா அஞ்சாவது நாளோ ஏழாவது நானோ இறங்கும். அப்போ தலைக்கு தண்ணி ஊத்துவாங்க அதுக்கு சாதாரண தண்ணிய உபயோகிக்கக்கூடாது அதுக்கும் ஒரு பத்தியம் இருக்கு. சொல்றேன்...
ஒரு பக்கெட் நெறைய தண்ணி நிரப்பி, அதோட ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடி அருகம்புல், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு வெயில்ல காய வைக்கணும் மதியம் ஒரு மணி அளவுல இந்தத் தண்ணியை எடுத்து தலைக்குக் குளிக்கணும்.
குளிக்கிறதுக்கு முன்னால், வேப்பிலை 4 இணுக்கு, அருகம்புல் இணுக்கு. கொஞ்சமா மஞ்சள் தூள் சேர்த்து அரைச்சி. தண்ணியில கலந்து தலையில லேசா தெளிக்கணும் கொஞ்ச நேரம் கழிச்சு பாசிப்பயறு தேய்ச்சிக் குளிக்கணும். அம்மை முழுகமா போற வரை அஞ்சு முறையோ ஏழு முறையோ இப்படி குளிச்சுட்டு வந்தாலே அம்மை நோய் முழுகமா குணமாகிடும்.
அம்மை நோய் வந்தா... வேப்பம் இலையை யும், மஞ்சளையும் சேர்த்து மையா அரைச்சி, அம்மை மேல தடவுங்க. வேப்பந்தழையைப் போட்டு அது மேல படுத்து தூங்குறதோட பளை நுங்கு, இளநீர்னு குளுமையான ஆகாரமா சாப்பிடுங்க. சீக்கிரமே குணம் கிடைக்கும். வீட்டுலயோ.. தெருவுலயோ ஒருத்தருக்கு வந்தபிறகு, மத்தவங்களுக்கு பரவாம இருக்கணும்னா... சின்ன வெங்காயத்தைத் துண்டு துண்டா வெட்டி வாசக்கதவு, ஜன்னல் ஓரங்கள்ல வையுங்க, வேப்பத் தழையைக் கட்டி தொங்க விடுங்க முத்தின கத்திரிக்காயை வாங்கிட்டு வந்து, தீயில நல்லா சுட்டு, சின்ன வெங்காயம், கட்ட மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து பிசைஞ்சு சாப்பிடுங்க. அம்மை நோயில் இருந்து உங்களைக் காப்பாத்திக்கலாம்!

No comments:
Post a Comment