2 Ways To Use Dragon Fruit Facepack For Instant Glow வெளில போகும்போது முகம் ஜொலிக்கணுமா... டிராகன் பழத்துல பேஸ்பேக் போடுங்க... கண்ணாடி மாதிரி முகம் ஆகிடும்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 28 July 2021

2 Ways To Use Dragon Fruit Facepack For Instant Glow வெளில போகும்போது முகம் ஜொலிக்கணுமா... டிராகன் பழத்துல பேஸ்பேக் போடுங்க... கண்ணாடி மாதிரி முகம் ஆகிடும்...

வெளில போகும்போது முகம் ஜொலிக்கணுமா... டிராகன் பழத்துல பேஸ்பேக் போடுங்க... கண்ணாடி மாதிரி முகம் ஆகிடும்...

எல்லோரும் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் முக அழகை உடனடியாக மெருகேற்றிக் கொள்ள டிராகன் பழத்தை மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். டிராகன் பழம் உங்களின் சருமத்தை பிரகாசமடைய உதவி புரியும். டிராகன் புரூட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிளாவனாய்டுகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்டுள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மட்டுமின்றி, சருமத்திலும் பல மாயங்களைச் செய்கிறது.
உங்களின் சருமம் கதிரியக்கத்தில் சேதமடைந்து இருந்தால் அதனை மீட்க டிராகன் புரூட் உதவும். அதுமட்டுமின்றி, வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் டிராகன் பழம் உதவி புரிகிறது. தோல் பிரச்சனையை சரி செய்ய டிராகன் பழத்தை தோலில் மேற்பூச்சாக பயன்படுத்தலாம். அல்லது உண்ணவும் செய்யலாம். இதனால் உங்களின் சருமம் பலபளக்கும். அதிலும் குறிப்பாக, முக அழகுக்கு டிராகன் பழத்தின் பயன்பாடு மிகவும் சிறந்தது. ஏனெனில், டிராகன் பழம் முகத்தின் சரும அடுக்குகளில் நேரடியாக வேலை செய்து, சருமத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கச் செய்கிறது. இதனால், உங்கள் முகத்தின் மந்தமான தன்மை, முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கும். ஆதலால் உங்களின் முகம் பொலிவுறும்.
இவ்வளவு நன்மைகளைக் கொண்ட டிராகன் பழத்தை முக அழகுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
இந்த டிராகன் பழ பேஸ் மாஸ்க்க்கு நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபமான வேலையே. ஒரு டிராகன் பழத்தை நன்றாக பேஸ்ட் போல் அரைத்து சிறிது நேரம் குளிரூட்டிக் கொள்ளுங்கள். பின் அதனை உங்கள் முகத்தில் மாஸ்க் போல் தடவி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதனை விட்டுவிடுங்கள். முகத்தில் போட்ட மாஸ்க் கெட்டியாகத் துவங்கிய பின், அதனை நீக்க சிறிது தண்ணீரைத் தொட்டு மசாஜ் செய்யுங்கள். பின், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

No comments:

Post a Comment