வயிற்றுப் போக்கிற்கு..
நீண்டகால வயிற்றுப் போக்கிற்குத் திராட்சை விதைகளைச் சேகரித்துத் தூள் செய்து காற்றுப் புகாத பாட்டில்களில் வைத்துக் கொண்டு ஐந்து கிரெய்ன் அளவு காலையும் மாலையும் வெண்ணெய் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.
வயிற்று வலி, சீதபேதி, அஜீரணபேறி முதலியவற்றிற்கு உளுந்து மாவுக்கூழும் களியும் நல்லது. நீர் எரிச்சலும் உஷ்ணத்தால் தீ தாராளமாய் இறங்காமையும் உள்ள சமயங்களில் உளுந்தம் பருப்பை நீரில் ஊற வைத்துக் குடிநீராகக் கொடுக்கலாம்.
சிறு குழந்தைகளுக்கும். பெரியவர்களுக்கும் ஏற்படும் வயிற்று கடுப்பு, ஜலதோஷம், நித்திரையின்மை முதலிய சாதாரண நோய் களுக்கு கசகசாவை பாலில் அரைத்துக் கொடுத்தால் நல்லது,
பதினைந்து கிராம் வசம்புடன் ஐம்பது கிராம் வேப்பிலையைச் சேர்த்து
கஷாயம் வைத்து வேளைக்கு 50 மி.லி மூன்று வேளை சாப்பிட
இரண்டொரு தினங்களில் வயிற்றோட்டம் நிற்கும்.
அடிக்கடி பேறியாகிக் கொண்டிருந்தால் எலுமிச்சம்பழத்தை குளிர்ந்த நீரில் பிழிந்து உள்ளுக்கு சாப்பிட பேதி நிற்கும்.
No comments:
Post a Comment