முடி அதிகமா கொட்டுதா? முடியின் அடர்த்தி குறையுதா? இதோ அதைத் தடுக்கும் வழிகள்!
அழகு என்று வரும் போது அதில் தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் தற்போது கொரோனா பரவுவதைப் பார்க்கும் போது, பலருக்கும் மனதில் ஒருவித பயம் அதிகரிக்கிறது. அதோடு கொரோனா ஊடரங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியிருக்கிறது. இப்படி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பலருக்கும் ஒருவித அழுத்தம் மனதில் ஏற்படுகிறது. மன அழுத்தம் அதிகரித்தால் அது தலைமுடி உதிர்வை உண்டாக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால், நாம் மன அழுத்தமின்றி சந்தோஷமாக இருக்க வேண்டும்.
அதோடு தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு முயலாமல் இருந்தால், பின் உங்கள் முடி எலிவால் போன்றோ, ஆங்காங்கு வழுக்கையாகவோ தென்பட ஆரம்பித்துவிடும். தலைமுடி உதிர்வதை நிறுத்தி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் அடர்த்தியாகும். இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

முட்டை
முட்டையில் முடியை வலிமையாக்க உதவும் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அதோடு முட்டை தலைமுடியை பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஒரு டேபிள் பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

வெங்காய சாறு வெங்காயச் சாறு தலைமுடியை அடர்த்தியாக்க பெரிதும் உதவக்கூடியது. அதற்கு வெங்காயச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.
No comments:
Post a Comment