தொண்டைப் புண்ணா?
அன்னாசிப் பழச்சாற்றை வாயில் ஊற்றி மெதுமெதுவாகத் தொண்டையில் வைத்திருந்து விழுங்க வேண்டும் அல்லது பழச்சாறு தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தாலும் தொண்டைப் புண் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டால் சிறு கசப்புச் சுவையோடு வழவழப்பாக இருக்கும். இதனால் தொண்டைப்புண், வாய்ப்புண், கண்ணெரிச்சல், தேகக் காந்தல் குணமாகும்.
வெந்நீரில் நிறைய உப்புப் போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி, தொண்டைக் கமறல் குணமாகும்.
தொண்டை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதிமதுரப்பாலும்
கற்கண்டும் புழுங்கலரிசியையும் வாயில் போட்டு அடக்கிக் கொண்டு
அதன் சாற்றை விழுங்க நல்வ குணம் தெரியும்.
No comments:
Post a Comment