மருத்துவகுணம் நிறைந்த துளசியை எந்த முறையில் பயன்படுத்துவதால் பலன்கள் கிடைக்கும்...?
ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் துளசியை சாப்பிட்டால் நுரையீரலை காப்பாற்றும். அதில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோய் கூட கட்டுப்படுத்தும்.
* 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.* 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை லேசான சூடான நீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.
* துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வறட்டு இருமல் சளி இருமல் இருப்பவர்கள் துளசியை மென்றாலே பலன் காணலாம்.
* துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக்குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.
* சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் சுவாசப் பிரச்சனை சீராகும்.
No comments:
Post a Comment