தாது விருத்திக்கு.
தாது நீர்த்துப் போய் போக சக்தி குறைந்து சோர்வு அடைபவர்கள் சிறிது அம்மான் பச்சரிசி இலையைப் பறித்து உலர்த்தி தூள் செய்து அதற்குச் சமமாகக் கற்கண்டு தூள் சேர்த்து காலை, மாலை 6 கிராம் வீதம் சாப்பிட்டு உடனே பசும்பால் அருந்தி வர நல்ல தாது விருத்தி உண்டாகும்.
ஓரிதழ் தாமரைச் செடியின் இலையைப் பறித்து பச்சையாகவோ அல்லது உலர்த்திப் பொடி செய்தோ சம பாகம் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர 15 தினங்களுக்குள் உடல் வெப்பம் தணிந்து சிறுநீர் தாராளமாயிறங்கும். தாதுவும் கெட்டிப்படும்.
வயதான ஆண்களுக்கு மட்டுமல்ல அநேக தற்கால இளைஞர் களுக்குக் கூடத்தாள் குறியின் விறைப்புத் தன்மை குறைந்து துவண்டு விழுவதுண்டு போகம் செய்ய ஆவல் எழும். ஆனால், உறுப்பு ஒத்துழைக்காது, இதற்கு கருவேலம் பிசின் ஒரு வரப்பிரசாதமாகும். நன்றாய்க் காய்ந்த கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு காலை, மாலை சாப்பிட்டு வர ஆண்மையும். தாது விருந்தியும் ஏற்படுவதுடன் குறியின் தளர்ச்சி நீங்கி விறைப்பும் ஏற்படும்.
*கரிசலாங்கண்ணிக்கீரையை கூடுமானவரை பச்சையாகவே சாப்பிடலாம். அதிக காரம், புளி சேர்க்காமல் சமைத்தும் சாப்பிடலாம். பருப்புடன் சமைத்து சாப்பிட தாதுக்களை திடப்படுத்தும். ஈரல் நோயே வராது. வெள்ளை, வெட்டை நோய்கள் விலகும். பற்கள், தலைமுடி. கண்கள். தோல் ஆகியவை தேய்வு அடையாமல் வலிமை பெறும்.
No comments:
Post a Comment