மசக்கைத் தொந்தரவா?
*கர்ப்பம் தரித்த பெண்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் '/, லிட்டர் பார்வியைப் போட்டு நன்றாக வேக வைத்து சிறிது உப்பும். அரை எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து தினமும் அவ்வப் போது சில நாள்கள் குடித்து வர மசக்கையில் உண்டாகும் தொந்தரவு மறையும்.
மலேரியா காய்ச்சலா?
துளசி சாறு, இஞ்சி சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட மலேரியா காய்ச்சல் குணமாகும்.
*மிளகுடன் நொச்சி இலையைச் சேர்த்துக் கஷாபம் வைத்து சாப்பிட இரண்டொரு தடவையில் ஜுரம் தணியத் தொடங்கி விடும்.
வேப்பமர பட்டையையும் சண்பக மரப்பட்டையையும் சேர்த்து இடித்துக் காய்ச்சிய குடிநீர் தினம் இரு வேளை பன்னிரண்டு நாள்கள் கொடுத்து வர மலேரியா என்கிற குளிர் ஜூரம் நீங்கும்.
No comments:
Post a Comment