தொண்டைக் கட்டு நீங்க...
ஆடாதொடை இலையை நெருப்பிலிட்டு சற்று வதங்கச் செய்து சாறு
பிழிந்து கொள்ள வேண்டும். அதில் தேனையும் கலந்து மூன்று
லேளை சாப்பிட்டால் போதும் தொண்டைக் கட்டு நீங்கும்.
தொண்டைக் கரகரப்பையும் குரல் கம்மலையும் போக்க நன்றாகத் தூள் செய்த திப்பிலியில் ஆறு கிரெய்ன் வரை இரண்டு மூன்று வேளை தேனோடு சேர்த்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும். இதை சாதாரண இருமலுக்கும் கொடுக்கலாம். நீண்ட நாள்கள் உபயோகித்து வர ஆஸ்துமா நோயும் குணமடையும்,
குப்பைமேனி இவைச் சாற்றுடன் சிறிது கண்ணாம்பைச் சேர்த்துக் குழைத்து தொண்டையின் மேல் பற்றிட இரண்டொரு நாளில் குணம் தெரியும்.
கற்பூர வல்லி இலைச் சாறு அரை அவுள்ஸ் எடுத்து சிறு கோரோசனை மாத்திரையை நசுக்கிக் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தொண்டைக்கம்மல் நீங்கும்.
* தொண்டைக் கம்மல், குடல் வாதம், மூலரோகம் உள்ளவர்கள் முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட நோய் அகலும்.
No comments:
Post a Comment