உட்சூடு நீங்க ..
*உடலில் ஏற்படும் உட்சூடு. மேகம், ஆண்களின் உறுப்பில் ஏற்படும் இரணம். நீரிழிவு, நாவறட்சியைப் போக்குவதில் வெள்ளை அல்லி சிறந்து விளங்குகிறது. இப்பூவின் சர்பத் சாப்பிட்டு வர மேற்சொன்ன பிணிகள் நீங்குவதுடன் அதிக வெப்பத்தால் ஏற்படும் கண் நோய்களும் விலகும்.
கணைச்சூடு உள்ளவர்கள் தினமும் சுத்தமான தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். உணவில் அதிக வெங்காயம் சேர்த்துக் கொள்வது நலம்.
*வெள்ளரிப்பிஞ்சை பச்சையாக மிளகுத் தூள் கலந்தும் சமைத்தும்
சாப்பிட உடல் உஷ்ணம் குறையும்.
கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் தேக உஷ்ணத்துக்கு, நெருஞ்சி முள் செடி இரண்டு. அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து நசுக்கி மண் சட்டியிலிட்டு கஷாயம் வைத்து வடிகட்டி வேளைக்கு 2 அவுஸ் வீதம் மூன்று வேளை மூன்று நாள்கள் குடிக்க குணமாகும். பருப்புக் கீரையை (கோழிக்கீரை ) சமைத்துச் சாப்பிட உடல்
குளிர்ச்சியடையும். கண்கள் ஒளி பெறும். குளிர்ந்த உடல் உடையோர்
இதனுடன் மிளகும் சீரகமும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்,
No comments:
Post a Comment