CURRY LEAVES கறிவேப்பிலையை பச்சையாக உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 22 July 2021

CURRY LEAVES கறிவேப்பிலையை பச்சையாக உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!

கறிவேப்பிலையை பச்சையாக உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!


காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு  அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு  சீராக இருக்கும்.
 
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற  பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
 
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
 
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை  உணர்வீர்கள்.
 
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

No comments:

Post a Comment