பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் டாப் 10 வழிகள்!
பொதுவாக தலைமுடி உதிர்விற்கு பொடுகும் ஓர் முக்கிய காரணம். குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையை ஏராளமானோர் சந்திப்பார்கள். இதற்கு காரணம் மிகவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் மிகவும் சூடான நீரால் தலைக்கு குளிப்பது. பொடுகு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பாதித்து, வேர்களை பலவீனமாக்குவதோடு, முடி வெடிப்பு மற்றும் தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும். எனவே தான் ஏராளமானோர் குளிர்காலத்தில் அதிக தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
ஒவ்வொருவருமே அழகான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை விரும்புவோம். ஆனால் பொடுகு ஒருவரது தலைமுடியை வறட்சிக்குள்ளாக்கி, பொலிவிழக்கவும் செய்யும். எனவே பொடுகு இருந்தால் அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது முக்கியம். அதற்காக கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.
வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே பொடுகுத் தொல்லையை விரட்டலாம். அதோடு ஆரோக்கியமான உணவு மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை முறையையும் வாழ முயற்சிக்க வேண்டும். இப்போது குளிர்காலத்தில் சந்திக்கும் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை சரிசெய்ய உதவுவதோடு, பல்வேறு கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்கும். அதற்கு ஒரு கையளவு வேப்பிலையை 4 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரை இறக்கி குளிர வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியை அலச வேண்டும். இதனால் சீக்கிரம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை விரட்ட உதவும். அதோடு இது வறண்ட தலைச் சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கி, வறட்சியால் ஏற்படும் தலை அரிப்பில் இருந்து விடுவிக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அந்த கலவையை தலைச்சருமத்தில் தடவி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பொடுகை விரைவில் தடுக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரும் பொடுகைப் போக்கும் திறன் கொண்டது. ஏனெனில் இது தலைச் சருமத்தில் உள்ள pH அளவை சமநிலையில் பராமரித்து, ஈஸ்ட்டுகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதோடு, வினிகர் மயிர்கால்களை சுத்தம் செய்கிறது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, அத்துடன் சிறிது டீ-ட்ரீ எண்ணெய் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment