Ear pain (காதுவலி)
காதுவலி
தீக்குச்சி, துடைப்பகுச்சி, கொண்டை ஊசி போன்றவற்றால் காது குடைவது மிகவும் கெடுதி. காது குடைவதும் பல் குத்துவதும் கெட்ட பழக்கம். இதனால் காதுக்கும், பல்லுக்கும் கேடு வரும்.
காதுக்குள் செவிப்பறை என்ற மென்மையான தோல் இருக்கிறது. அதில் குச்சிபட்டால், புண்ணாகி விடும். செவிப்பறை கிழிந்தால், காது கேட்காது. செவிப்பறை சேதமடைந்தால், காது மந்தம் ஆகும். செவிப்பறை புண்ணானால், காது வலிக்கும், ஆகவே, இனி எந்தக்காரணத்தைக் கொண்டும் எந்த பொருளைக் கொண்டும் காது குடையாதீர்கள்.
* காதில் சீழ்வடிவதும், வடிவது தடைபட்டாலும் காது வலி வரக்கூடும். அடிக்கடி சளிபிடித்தாலும் காது வலிக்கும். ஆகவே, காது ஏன் வலிக்கிறது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு வைத்தியரின் நேரடி உதவியை நாடுவது நல்லது.
* கொண்டை ஊசியால் குடைந்தால்தான் காது வலிக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால், கடையில் கடுகு எண்ணெய் வாங்கி, அதில் தும்பைப்பூ சிறிது பெருங்காயம் போட்டு காய்ச்சவும். இந்த எண்ணயை காதில் விட்டு வர வலி நீங்கும். மாதுளையை சாறு எடுத்து, இளஞ்சூடாக்கி காதில் விடுவதும் இதற்கு நல்லது. தென்னை மர வேரை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, இளஞ்சூடாக இரண்டு, மூன்று சொட்டு காதில் விட்டாலும் வலி நிற்கும்.
No comments:
Post a Comment