Excessive bocca (அளவுக்கு மிஞ்சிய போக்கா)
தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் தேன் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இரத்தம் கொட்டும் மூலத்திற்கும். அளவுக்கு மிஞ்சிய மாதத்தரப் போக்கிற்கும் இப்பூவின் கஷாயம் நல்ல பயனளிக்கிறது. சாதாரண இருமலுக்கும் இக்கஷாயத்தை உசிதம் போல் சாப்பிட்டுக் குணம் பெறலாம்.
அரசமரத்து இவை. நாவல் இலை, மாவிலை, அந்தி இலை இவற்றைச் சமபங்கு எடுத்து சுத்தம் செய்து கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். நாள்தோறும் காலையும் இரவும் 100 மி.வி. பருகி வர பத்து தினங்களில் சரியாகி விடும்.
முருங்கைப் பூவை அரைத்து ஒரு பெரிய உருண்டை அளவு எடுத்து அரை விட்டர் பசும்பாவில் கரைத்து அத்துடன் அரைவிட்டா தேங்காய்ப் பாலையும் சேர்த்து அடுப்பிலேற்றி பக்குவமாக லேகியம்
தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் எலுமிச்சங்காயளவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் பெரும்பாடுப்பிணி நீங்கும்.
மாத விலக்கு அநேக நாள்கள் நீடித்தால் நன்கு காய்ந்த மாங்கொட்டை பருப்பை பொடி செய்து ஒரு ஸ்பூள் அளவு எடுத்து சுத்தமான தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வா மூன்றே நான்களில் சரியாகி விடும். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் சரியாகி விடும்.
மாதவிலக்கு அதிக நாள்கள் நீடித்தால் அருகம்புல்லையும் மாதுளை இலையையும் சேர்த்துக் கஷாயம் வைத்து அரை டம்ளர் காலை மாலை சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் மாத விலக்கு நின்று விடும்
No comments:
Post a Comment