வெந்தயம் ( Fenugreek uses in health )
நமது உடம்பிற்கு தினசரி கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து
தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் நார்ச்சத்து கொண்ட பொருள். கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையைத் தரும். கரையாத நார்ப்பொருளே மலச் சிக்கலை நீக்குவதுடன், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சாம்பார், இட்லி, ரசம் என அத்தனை உணவிலும் வெந்தயம் சேர்ப்பது நல்லது. அளவுக்கு அதிகமானால் கசப்புத் தன்மையும் ஏற்படும். நீரிழிவு ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோயுக்கும் ஒரு பொது மருந்தாகும் வெந்தயம். வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
* வெந்தயத்தை மோரில் ஊற வைத்தது அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருப்துடன் கண்ணிற்கும் குளிர்ச்சியாக இருக்கும்.
* அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து பூண்டை தட்டிப்
போட்டு கஞ்சி வைத்தது குடித்தால் எளிதில் செரிக்கும். இளம்
தாய்மர்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
No comments:
Post a Comment