GREENS வெந்தயக்கீரையில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 19 July 2021

GREENS வெந்தயக்கீரையில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....?

வெந்தயக்கீரையில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....?


Fenugreek Leaves


வெந்தய கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய்  தொல்லைநீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
வெந்தயக் கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச்சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை  அதிகரிக்கும்
 
மூலநோய், அதிக அமிலத்தன்மை,  உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும். 
 
வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு,  இரத்தசோகை ஆகியவை குணமடையவும்  பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
 
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒருடம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
 
வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.

No comments:

Post a Comment