Head care remedies and tips( மூளை) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 2 July 2021

Head care remedies and tips( மூளை)

Head care remedies and tips( மூளை)

 மூளை


மனிதன் மனிதனாக இருப்பதை சொல்வது மூளைதான். அறிவில்லாமல் ஒருவர் எதையாவது செய்தால் 'மூளை இருக்கா?’ என்று கேட்போம். மனிதன், பார்ப்பது, கேட்பது, சாப்பிடுவது, நடப்பது, ஆடுவது, பாடுவது என அனைத்தையும் சொல்வது செய்வது மூளைதான். மூளையின் இயக்கம் நின்றால் மனிதன் செயலிலந்தவன் ஆகின்றான். மூளை தான் மனிதனின் மொத்த இயக்கம், மூளை பலம் பெற குறிப்புகளை பார்ப்போம்.


* மூளை & உடல் பலன்பெற பசும்பால் நல்லது. பிறந்த குழந்தை முதல் வயோதிகர் வரை, நல்ல திடமானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அருமருந்துபோல் சாப்பிட பாலே சிறந்தது. குடித்தவுடன் புத்துணர்வு தரத்தக்கது. தலைசுற்றல், மலச்சிக்கல்நீர் சுருக்கம் மற்ற இரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பகம் பாலே நல்ல மருந்து. பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.


* மூன்று பேரிச்சம் பழங்களை சூடான நீரில் இரவில் ஊறப்போட்டு, காலையில் தேனுடன் பிசைந்து நீருடன் உண்டு வந்தால் மலச்சிக்கல் சரியாவதுடன் இருதயம் & மூளைக்கு வலுவூட்டும்.


*வாரம் 2, 3 தினம் வெண்டைக்காயை பொறியலாகவோ, குழம்பாகவோ சாப்பிட்டு வர மூளை பலம் பெறும்.


* வல்லாரைக் கீரையை வாரம் 2, 3 தினம் சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.


* ஆப்பிள் பழத்துண்டுகளை தேனில் ஊற வைத்து தேனுடன் உண்டு வந்தால் மூளை வளம் பெறுவதுடன் முகமும், தேகமும் அழகு பெறும்.


* தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் சேர்த்தால் மூளை நரம்புகள் வலுவடைந்து மூளை சோர்வை நீக்கும்.


* தினசரி 1, 2 தக்காளி பழம் இயற்கையானதாக (பிரிட்ஜில்


வைக்காமல்) சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறுவதுடன்


நரம்புகள் வலிமை பெறும்.


* சூடான உணவு பழக்கம் மூளைத்திறன் நன்றாக இருக்கும். ஆறிய சோறு, புழுங்கல் அரிசி, டப்பா உணவுகள், ஊறுகாய், இட்லி இவை மூளை மந்தம் உண்டாக்கும்.

* அகத்திக் கீரையை அரசி கலைந்த நீரில் சீரகம், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் அதிலுள்ள நீரை பிழிந்து சாப்பிட மூளைக் கோளாறு நீங்கும்.

No comments:

Post a Comment