Head care tips tamil (தலை)
தலை
மனித உடலில் முதன்மையானது தலை. முழு உடம்பையும் கட்டுப்படுத்துவது தலையேயோகும். ஐம்புலன்களில் நான்கு புலன்கள் தலையில்தான் உள்ளன. இனி தலை சம்பந்தமான பிணிகளை பார்க்கலாம்.
* தினமும் காலையில் செய்யலாம். செலவில்லாதது. பல் துலக்கியவுடன், வாயைச் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கினை அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். முதுகை நன்றாக வளைத்து, வாந்தி வரச் செய்யவும். அவ்வாறு செய்யும் போது உணவு குழல் வழியாக உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்தநீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதை தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும். எனவே தினசரி (சளித் தொல்லை இருந்தாலும், இல்லையென்றாலும்) இது போலச் சுத்தம் செய்து சளியையும், பித்த நீரையும் வெளியேற்றினால் பல்வேறு நோய்களுக்கான மூல காரணங்களும், வெளியேற்றப்பட்டு மூச்சு வழி காற்றுப் பாதையும் சரியாகி விட்டால் இருதயம், வயிறு. சிறுநீர் உபாதைகள் வரை நீங்கி உடல் ஆரோக்கியம் இயற்கையாகவே சரி செய்யலாம்.
* நொச்சி இலைகளை தலையணைக்குள்ளே பரப்பி வைத்து தூங்கினால் நிம்பதியான தூக்கம் வருவதுடன், தலைபாரம் இறங்கி, சளிப்பிரச்சனையும் விலகி விடும். தலையணை அதிக உயரயில்லாமல் படுக்க வேண்டும்.
தலைவலி -ஜலதோஷம்-பித்தம், வாந்தி - கபம்
* மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து, இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளயும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி அகலும்,
No comments:
Post a Comment