Headpain - cold - Remedies (தலைவலி -ஜலதோஷம்-பித்தம், வாந்தி - கபம்)
தலைவலி -ஜலதோஷம்-பித்தம், வாந்தி - கபம்
* மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து, இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி அகலும்.
திப்பிலி ஒரு பங்கு, துளசி இலை 3 பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும். * தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை, மாலை 2
நாட்கள் சாப்பிட சளி அகலும், * சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.
* நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டாலும் அல்லது கொண்டைக் கடலையை லேசாக வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர தலைவலி, தலைபாரம், இருமல் தீரும்.
* பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பெடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேரத்த்ததுசாப்பிட்டு வர மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும்.
* துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும். * துளசி இலைச்சாறு, வில்வ இலைசாறு வகைக்கு 100 மிலி
எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக்
காய்ச்சி, சாறுசுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு
தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும்.
ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும்.
*மிளகை ஊசியால் குத்தி தீயில் சுட்டு அதனுடைய புகையை
மூக்கு வழியே இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும்.
No comments:
Post a Comment