Heart care part 2( இருதயம்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

Heart care part 2( இருதயம்)

இருதயம்



பீட்டா காரோட்டீன்ஸ்' அதிகமுள்ள உணவுகளை உண்பது

இருதயத்துக்கு நல்லது. எனவே குறிப்பாக கோட், முட்டைகோஸ்,

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை வகைகளை உணவில் சேர்த்து உண்டால் உணவே மருந்தாகும். * வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, உடலே நாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், நிறைய வயது வித்தியாசம் உள்ளவர்களுடன் உறவு

கொள்வதும் இதய நோயாளிகளுக்கு கூடாது.

* ஆகாயத் தாமரை என்று நாட்டு மருந்துக் கடையில் கேட்டு வாங்கி, அதை அப்படியே கியாழமாக வைத்து, தேனும், பாலும் கலந்து சாப்பிட்டு வர கவாசகாசம் குணமாகும்.

* வெள்ளரிக்காயை நசுக்கிப் பிழிந்து சாறு 20 மிலி எடுத்து தேன் 30 மிலியுடன் சேர்த்து இரண்டையும் ஒன்றாக கலந்து வேளைக்கு 15மிலி வீதம் மூன்று வேளையாக 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மேல் மூச்சு & கீழ் மூச்சு வாங்குதல் போன்ற சுவாசகாசம் குணமாகும்.

* கற்பூர வள்ளி இலையை ஒன்றிரண்டாக நறுக்கி நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதனுடன் தேன் கலந்து குடித்து வர படபடப்பு, மூச்சுத் தினறல், இருதய நோய் குணமாகும்.

* திராட்சைப் பழங்களைப் பன்னீரில் ஊறவைத்து பிழிந்து பன்னீருடன் சாற்றைப் பருகி வந்தால் இருதய நோய்கள் வராது. பன்னீர் கிடைக்காத பட்சம் சுத்தமான (மினரல்) தண்ணீரை பயன்படுத்தலாம்.

* அகத்திப் பூக்களை பாசிப்பருப்புடள் சேர்த்து வேகவைத்து கூட்டாக உண்டு வந்தால் நல்லது. செர்ரிப்பழம் தூக்கமின்மையைப் போக்கி இருதயத்தைப் பாதுகாக்கும்.

* ஆரஞ்சுப் பழச்சாறு நோய்கள் வராமல் தடுத்து, சுவாசத்தை சுகமாக்கி, இருதயத்தைப் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment