இருதயம்
மனிதன் ஓய்வெடுக்கலாம். ஆனால் அவனுள்ளே இருக்கும் இருதயம் ஓய்வெடுப்பதில்லை. கருவில் தொடங்கி மனிதன் உயி பிரியும் வரை நிற்காமல் உழைப்பது இருதயம்தான். இருதய அன்பிற்கும், உண்மைக்கும் உறைவிடமாக சொல்லப்படுகிறது இருதயம் அவரவரது சவ்வினால் சூழப்பட்டு, நுரையீரல்களின் நடுவில் இருபுறமும் பிடிமானம் இன்றி பின்புறம் சுவாசக் குழல்கள் முதுகுத் தண்டு இவற்றுடன் இணைந்துமேலே விரிந்து, கீழே குவிந்து அமைந்து இருக்கும். உடலில் உள்ள அசுத்த இரத்தத்தை பெற்று நுரையீரலுக்கு அனுப்பி, சுத்த ரத்தத்தை பெற்று அதை மீண்டும் உடல் பாகங்களுக்கு அனுப்பி வைக்கும் வேலை செய்து கொண்டே இருக்கிறது. இருதயம் சுருங்கி விரிந்து இந்த வேலையை செய்து கொண்டே இருக்கிறது. இனி இருதயத்திற்கு தேவையான குறிப்புகளை பார்க்கலாம்.
*தரிதோஷம் (வாதம், பித்தம், கபம்) நீங்கி இருதயம் பலப்பட இஞ்சிக்கு முதலிடம் உண்டு. இஞ்சியின் மேல் தோலை சீவி இடித்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து, அதனடியில், நிற்கும் சுண்ணாம்பை தள்ளி தெளிவான ரசத்தில் 20 கிராம், தினசரி அதிகாலையில் உட்கொள்ளவும். குழந்தைகளுக்கு இந்த ரசத்தில் பாதி அளவு எடுத்து ஒரு சிட்டிகை பனை வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம்.
*நெல்லிக்காய் அல்லது கடுக்காய் பிஞ்சை ஊறுகாய் போல் உபயோகித்து சாப்பிட்டு வந்தால் திரிதோஷ ஹரம் நீங்கி இருதயம் பலப்படும்.
No comments:
Post a Comment