அற்புத மருத்துவகுணம் கொண்ட சிறியாநங்கை மூலிகையின் பயன்கள் !!
காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.
காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும்.
மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சிறியா இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 - முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும்.
சிறியாநங்கை இலைகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்றாக அரைத்து நம் உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதன் மீது பத்து போட்டுவர வீக்கத்தின் அளவானது குறைந்து விடும்.
நீரிழிவு நோய் சிறியா நங்கை இலைப் பொடியுடன், காய்ந்த நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் இலை பொடி, இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும்.
No comments:
Post a Comment