HONEY AND AMLA தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 22 July 2021

HONEY AND AMLA தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் !!

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் !!

gooseberry soaked in honey

தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள அழுக்கை வெளியேற்றி கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும் சிறுநீரகக் கோளாறுகளையும்  வராமல் தடுக்கும்.

முடி கொட்டும் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தேன் நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதனால் முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு மயிர்கால்கள் வலிமையடைந்து முடியின் வளர்ச்சிக்கு உதவும்.தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்களில் சிவப்பு, கண்களிலிருந்து நீர் வடிவது போன்ற பிரச்சனைகள்  வராமல் தடுக்கும்.
 
வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 தேன் நெல்லிக்காய் கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
 
பெண்கள் பூப்படைந்த காலம் முதல் தினம் இரண்டு தேன் நெல்லிக்காய் சாப்பிடலாம். இதனால் மாதவிடாய் பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரீஸ், கர்ப்பப்பை புற்று போன்ற பிரச்சனைகளை சரிசெய்து விடும்.
 
மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைத்து சீரான மாதவிடாய்க்கு உதவும். பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப் போக்கு பிரச்சினைகளுக்கும் தேன் நெல்லிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
தேன் நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும். இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
 
செரிமான பிரச்சனை, பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் தேன் நெல்லி சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு நீங்கி நன்கு பசியெடுக்கும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கும் தேன் நெல்லிக்காய் நன்மையை தரும்.

No comments:

Post a Comment