பளிச் சருமம், பளபள கூந்தல் இரண்டையும் பெறுவதற்கு வினிகர் போதும், எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கங்க!
வினிகர் உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள். வினிகரில் பலவகைகள் உண்டு. வினிகரை கொண்டு சமையலின் சுவையை மட்டுமல்ல அழகையும் அதிகரிக்க செய்யும். அசிட்டிக் அமிலம் , மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலத்தால் நிறைந்துள்ளது. மற்றும் முக்கிய தாதுக்கள் மற்றும் நொதிகளால் ஏற்றப்பட்டு சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்கிறது. உங்கள் அழகு பராமரிப்பில் வினிகரை எப்படி சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.
வினிகரில் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பருவுடன் போராடுபவர்களுக்கு எளிதில் வரக்கூடும். பாக்டீரியா எதிர்ப்பு நன்மைகளை உடலில் அதிகரிக்க செய்யும்.
எப்படி பயன்படுத்துவது
வினிகரில் சுத்தமான காட்டன் பஞ்சை ஊறவைத்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதும். முகப்பருக்கள் பருக்கள் படிப்படியாக குறையும்.
கூந்தலின் பளபளப்பு
தலைமுடியை அலசி எடுக்க வினிகரை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான கூந்தலை பெறலாம். இதனால் முடி மென்மையாக இருக்கும். வினிகரில் இருகும் அசிட்டிக் அமிலம் கூந்தலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது.
எப்படி பயன்படுத்துவது
ஒரு கப் வினிகரை குவளையின் பாதி அளவு தண்ணீரில் கலந்து நன்றாக சேர்த்து, இறூதியில் கூந்தலை அலசி எடுக்கவும். இறுதியாக கூந்தலை அலசி எடுப்பதன் மூலம் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
பொடுகு சிகிச்சைக்கு வினிகர்
பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள வினிகர் பொடுகுத்தன்மையை கட்டுப்படுத்தவும் போராடவும் உதவும். பொடுகு அதிகமாக கொண்டிருப்பவர்கள் வினிகரை நேரடியாகவே பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது
வினிகரை நேரடியாக உச்சந்தலையில் பயன்படுத்தலாம். தலைமுடியை கழுவுவதற்கு முன்பு வினிகரை கொண்டு நன்றாக மசாஜ் செய்யலாம். ஷாம்புவிலும் வினிகரை சேர்த்து தலைமுடியை அலசி எடுக்கலாம்.
கால்களுக்கு டியோடரைசர்
வினிகர் கால் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவக்கூடியவை. இது புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும். கால்களில் இருக்கும் அழுக்கை நீக்கி சுத்தமாக வைக்க வினிகர் பயன்படுத்துங்கள்.
எப்படி பயன்படுத்துவது
நான்கு கப் தண்ணீரில் ஒரு கப் வினிகர் சேர்த்து இந்த கரைசலை உங்கள் கால்களில் ஊறவைக்கவும். இது கால்களில் நோய்த்தொற்றுகளை வைத்திருக்கும் பூஞ்சையை எதிர்த்து போராடும். கால்களை அழகாக வைத்திருக்கும்.
No comments:
Post a Comment