சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுநீரை பிரித்து இரத்தத்தை சுத்தமாக்கும் முக்கியமான வேலையை செய்கிறது. இடுப்பில் முள்ளந்தண்டின் அருகே நாலைந்து அங்குல நீளத்தில் இருபுறமும் உள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒவ்வொன்று வீதம் இருகுழல்கள் கிளம்பி, அடிவயிற்றின் நடுவில் கிடக்கும் நீர்ப்பையை நாடியோடி அதனுடன் பொருந்தும். சிறுநீர் சொட்டுச் சொட்டாய் அந்த குழாய்களின் வழியாய் இறங்கி நீர்ப்பையை அடையும். இதுவும் இருதயம் போல் முக்கியமான வேலையைச் செய்கின்றன.சிறுநீரகத்தினின்று மணல் சிறிய கல் முதலியன குழாய் மூலம் கீழிறங்கி நீர்ப்பையில் தங்குவதால் காணும் நீரடைப்பே கல்லடைப்பு ஆகும். இதனால் பொறுக்க முடியாத இடுப்புவலி ஏற்ப்படும். * கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீள், பார்லி, பீன்ஸ்
போன்றவைகளை சாப்பாட்டில் சேர்த்தால் மெக்னீசியம் என்ற சத்து அதிகமாகி சிறுநீரகம் (கிட்னி) கோளாறுகள் நீங்கும். * வெந்தயம் அல்லது வெந்தய கீரையை தினசரி உணவில்
சாப்பிட்டு வரலாம்.
* விராலி மஞ்சள் இலைகள் 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வரலாம்.
* 50 மி.லி. பாவற்காய் சாற்றில் மோர் கலந்து அருந்தி வந்தால்
நீரிழிவு நோய் நீங்கும்.
* திராட்சைப் பழம் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாராடைப்பை தடுப்பதுடன், கிட்னியில் கல் ஏற்படுவதைத் தடுக்கும். கண் பார்வையும் கூர்மையாகும்.
* அத்தி மரவேரிலிருந்து எடுக்கப்படும் கள் (நீர்) குடித்து வர
சர்க்கரை நோய் மற்றும் கிட்னிகோறாறுகளை குணப்படுத்தும்.
* வெண்டைக்காய் விதைகளைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில்
போட்டுக் காய்ச்சி மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்
கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும். * தேற்றாங்கொட்டையை பவுடராக்கி பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
* ஒருபிடி நெருஞ்சி இலைகளை ஒன்றிரண்டாக நசுக்கி, 2 பங்கு நீர் விட்டு காய்ச்சி, அது ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி தினமும் இருவேளை பருகி வர கல்அடைப்பு, நீர்கடுப்பு, ரத்தத்தில் உப்புச்சத்து மிகுதி போன்றவை நீங்கும்.
No comments:
Post a Comment