*வாழைத்தண்டு கூட்டு & குழம்பு நல்லது. வாழைத்தண்டை பச்சையாகவே சாறு பிழிந்து அல்லது தயிரில் பச்சடியாகவாவது செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள விஷப்பூச்சிகள் நீங்குவதுடன் மூத்திரப்பை கற்கள் நீங்கும்.
* நெருங்சில் குடிநீர் அல்லது நீர்முள்ளிக் குடிநீர் இவை கிட்னியில் கல்லடைப்பை நீக்கும்.
* அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர சிறுநீர் சம்பந்தமான கல்லடைப்பு நீங்கும்.
* திராட்சைப் பழத்துடன் மிளகை அதைதுச் சாப்பிட்டு வர
கல்லடைப்பு கட்டுப்படும்.
* சோளம் இடித்து மாவாக்கி களியாகக் கிண்டி சாப்பிட்டு வர சிறுநீர் கல்லடைப்பு & நீர்ச்சுருக்கல், இருமல், கக்குவான் போன்ற நோய்கள் குணமாகும். * மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி
செய்து, தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட
கற்கள் நீங்கும்.
* கற்பூர வள்ளி இலையுடன் செடியை கஷாயமிட்டு தினமும்
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக கற்களை
கரைத்து வெளியேற்றும்.
* கோவைக்காயை அரைத்து நீரில் கலந்து கொதிக்க வைத்து அதன் சாற்றைக் காலை & மாலை பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு & சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
* அசோகமரத்து விதையை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரகத்தில் ஏற்படும் கல்கரையும்.
No comments:
Post a Comment