knee மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் கருப்பு உளுந்து !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 18 July 2021

knee மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் கருப்பு உளுந்து !!

மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் கருப்பு உளுந்து !!


Ulundhu


கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
 
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 
 
மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.
 
உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய்  விரைவில் தீரும்.
 
கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. எனவே இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை  குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment