Nose blockage remedies (மூக்கடைப்பு)
மூக்கடைப்பு
மூக்கில் சதை வளர்ந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள், சளியையும் சோதிக்க வேண்டும். சாதாரண சளி, மூக்கடைப்பு என்றால் இந்த மருந்தை தயாரித்து பயன்படுத்தவும்.
* துளசி இலையை இடித்து சாறு எடுக்கவும். கால்லிட்டர் சாறு வேண்டும். அதே போல், வில்வ இலையையும் இடித்து கால் லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவும். அரை லிட்டர் நல்லெண்ணெய் தேவை, மூன்றையும் ஒன்றாகக் கலக்கி, அடுப்பில் வைத்து காய்ச்சவும், தண்ணீர் கண்டி, மணல் போல அடியில் வண்டம் படியும், அப்போது இறக்கி ஆற விடவும், ஆறியபின் எண்ணயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
* தினசரி காலையில் இந்த எண்ணயில் இரண்டு மூன்று துளிகள் எடுத்து, இரு மூக்கிலும் உறிஞ்ச வேண்டும். நன்றாகத் தும்மல் போட்டு, மூக்கைத் துடைத்து விடவும். இந்த எண்ணயை தலைக்கும் தேய்த்து வரவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வா. மூக்கடைப்பும், சளியும் நீங்கும். நல்ல குணம் அடையலாம்.
No comments:
Post a Comment