palm pain குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 18 July 2021

palm pain குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!


Heel pain

உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் செலுத்துவது அவசியம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும்.
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த  வேண்டும்.
 
குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
 
வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய  தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக  சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். தயிரை  தவிர்த்து தெளிந்த மோர் அருந்தலாம்.
 
குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசை நேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டு வலியும் ஏற்படும்.
 
கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.
 
ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள்.  இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.
 
கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின்  முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

No comments:

Post a Comment