மருவு மறைய...
* எருக்கம்பாவை தோலின் மீது படாமல் மருவின் மீது மாத்திரம் ஒரு வாரம் தடவி வர மருவு தாளே சருங்கி விழுந்து விடும்.
மலச்சிக்கலா?
பேரீச்சம்பழத்தை பாலில் வேகவைத்து இரவில் சாப்பிட மலச்சிக்கல் குணமாகி விடும்.
*தரைப் பசவைக் கீரையை அவ்வப்பொழுது சமைத்துச் சாப்பிட மலச்சிக்கல் அடியோடு போகும். வெள்ளை, வெட்டை குணமாகும். சிறுநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். போக இச்சையை உண்டுபண்ணும்.
நாள்தோறும் நாலைந்து வில்ல இலைகளை சாப்பிடலாம் அல்லது இரவு
உணவுக்குப்பிள் அம்மான் பச்சரிசி இலைக் கொழுந்து இரண்டை மென்று நின்னா பத்துப் பதினைந்து தினங்களில் மலச்சிக்கல் நீங்கும், எருமை வெண்ணெயும் வெல்லமும் கலந்து சுண்டைக்காயளவு
உள்ளுக்குக் கொடுக்க ஒரு முறை பேதியாகும். சற்று நேரங்கழித்து
வெந்தீர் குடிக்கச் செய்தால் மற்றொரு முறை பேதியாகும். மலச்சிக்கல் நீங்கிவிடும்.
*நுணா மரத்தின் வேரை இடித்து கொதிக்கும் நீரில் போட்டுக் கஷாய வைத்து வடிகட்டி சாப்பிட இரண்டொரு முறை பேதியாகும். *ரோஜாப்பூ இதழ்களை நிறைய சேகரித்து கற்கண்டு சேர்த்து இடித்து
ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கப்
போகுமுன் ஒரு கோலி குண்டளவு சாப்பிட மலம் தாராளமாகப்
போகும்
நிழலில் உலர்த்திய மந்தாரைப் பூவை இடித்துத் தூளாக்கி தினமும் சிட்டிகையளவு எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட மலமிளகும். உடல் வெப்பம் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
No comments:
Post a Comment