pine tree uses (பனை மரம்)
பனை மரம்
மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும் மரங்கள் வாழை, தென்னை, பனை. இதில் பனை மரத்தின் பாகங்களின் உபயோகம் நாம் அறிந்ததே. இன்று நமக்கு கிடைத்திருக்கும் பல அரிய சித்த, நாட்டு மருந்து குறிப்புகள், இலக்கியங்கள் இன்னும் பல அறிவு விஷயங்கள் நமக்கு பனை ஓலையில் எழுதப்பட்ட குறிப்புகள் வாயிலாக கிடைத்தன. பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடியவற்றின் பயன்களை பார்ப்போம். உண்ண
* நுங்கை தோலுடன் சாப்பிட்டு வர சிதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
* பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்டை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
* சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதநீர்
என்று பெயர். மேக நோய் இருப்பவர்கள் இதை தொடர்ந்து 40
நாட்கள் அருந்தி வந்தால் நோய் தீரும்.
* பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு
ஆகயிவற்றறுக்கும் பதநீரின் நோய் தீர்க்ககும் குணங்கள் உண்டு.
* பனை வெல்லத்துடன் சுக்கு மற்றும் நிலக் குமிழ் சம அளவு எடுத்துக் கொண்டு குடி நீராக காய்ச்சி குடிக்க அரம், மந்தம், மேக நோய் ஆகியவை நீங்கும்.
*பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் கண் நோய்கள் அகன்று விடும். பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியை பயன்படுத்துவோருக்கு வாதம், பித்தம், கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
No comments:
Post a Comment