கர்ப்பப்பை கோளாறு நீங்க...
*30 கிராம் இலவங்கப்பட்டையை அரைலிட்டர் நீர்விட்டுப் பாதியாகக் காய்ச்சி வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலையில் குடித்து வர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். குழந்தை பிறந்த பிள் சில நாள்களுக்கு இதைக் குடித்து வர கர்ப்பப்பை கருங்கிப் பழைய நிலையடையும்.
சில பெண்களுக்கு வீட்டு விளக்கின் போது, வயிற்றில் வலி கண்டு தொல்லை ஏற்படுத்தும். மருந்து கடைகளில் பிரண்டை உப்பு கிடைக்கும். அதில் இரண்டு குன்றி மணியளவு எடுத்து வெண்ணெயில் குழைத்து நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வர இந்த வலி குணமாகும்.
மாத விலக்குக்கு முன்பும் பிள்பும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் கல்யாண முருங்கை இலைச் சாற்றை காலையில் தொடர்ந்து பத்து நாள்கள் பருகி வர வயிற்று வலித் தொந்தரவு ஒழித்து போகும்.
*அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டால் அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல், மாதுளம் வேர்ப்பட்டை சம அளவு எடுத்து உலர்த்தி தூள் செய்து தினமும் இரண்டு வேளை சிட்டிகையளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர இரண்டொரு வாரங்களில் கர்ப்பப்பை பலமடைந்து கருச்சிதைவு ஏற்படாது,
No comments:
Post a Comment