கருமை நிறத்தை போக்கி சருமத்தை பராமரிக்க உதவும் ரோஸ் வாட்டர் !!
தேவையான பொருட்கள்: ரோஜா பூக்கள் - 50, தண்ணீர் - 2 லிட்டர். செய்முறை: ரோஸ் வாட்டர் செய்ய தேர்ந்தெடுக்கும் ரோஜாப்பூ நாட்டு ரோஜாப்பூவாகவும், பிங்க் நிறப்பூவாகவும் இருக்க வேண்டியது அவசியம். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
பின்னர் அதில் ரோஜா இதழ்களை போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு பிறகு எடுத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் அந்த நீரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால் சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment