STOMACH ULCER வயிறு உப்புசத்தை சரியாக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 22 July 2021

STOMACH ULCER வயிறு உப்புசத்தை சரியாக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

வயிறு உப்புசத்தை சரியாக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

lemon juice


ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இதில் இருக்கும் அசிட்டிக் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத்தை தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும் இதனால் வயிற்றில் வலியும்  குறையும். 

பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும் என்று கூறுவது உண்டு. வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட  பிரச்சனைகளை எளிதாக கலைகிறது. அதில் வயிற்று உப்புசத்தை விரைவாக சரி செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது.

வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்றிரண்டு  வாழைப் பழங்களை சாப்பிடுங்கள். பிறகு பசி எடுக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் தீர ஓமத்திரவம் கொடுப்பது உண்டு. அசௌகரியமான சமயத்தில் கொஞ்சம் ஓமத்தை வாயில் போட்டு தண்ணீரை  குடித்து விடுங்கள். கொஞ்ச நேரத்தில் வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுவை அகற்றி வயிற்று உப்புசத்தை குறைத்துவிடும். 
 
வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான சமயத்தில் மெல்லோட்டம், நடைப்பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை மேற்கொண்டால் கொஞ்ச நேரத்தில்  வயிற்று உப்புசம் சரியாகிவிடும்.
 
பிரியாணி சாப்பிட்டுவிட்டு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க இனிப்பு சோம்பை சாப்பிடுவது வழக்கம். நாம் எப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட்டது போல  உணர்கிறோமோ, அப்போதெல்லாம் கொஞ்சம் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றால் போதும் எளிதில் ஜீரணமாகிவிடும். அவ்வகையில் வயிற்று உப்புசம்  பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும்.

No comments:

Post a Comment