stomach வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 23 July 2021

stomach வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

பலரும் தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும்.எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
 
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
 
இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.
 
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

No comments:

Post a Comment