உங்கள் மீது எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? அப்ப இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க...

நாம் அனைவருமே நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக நன்கு குளித்து விட்டு, நல்ல வாசனைமிக்க டியோடரண்ட்டுகளை பயன்படுத்துவோம். ஆனால் டியோடரண்ட்டுகளில் உள்ள பாராபீன்கள் மற்றும் அலுமினியம் போன்றவை உடலக்கு பல வழிகளில் தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. அதோடு சிலருக்கு டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தினால், அக்குளில் ஒருவித அரிப்பு ஏற்படக்கூடும். இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.
சரி, உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தை வேறு எப்படி போக்குவது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு சிறந்த மாற்றாக நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன. இந்த இயற்கை பொருட்கள் வியர்வை நாற்றத்தைப் போக்குவதோடு, சருமத்திற்கும் பாதுகாப்பானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. சரி, இப்போது வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் அந்த நேச்சுரல் பொருட்கள் என்னென்ன மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை காண்போம்.
எலுமிச்சை சாற்றில் உள்ள அசிட்டிக் அமிலம் இயற்கையாக ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை. எனவே நற்பதமான எலுமிச்சை சாற்றினை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, அக்குள் மற்றும் உங்களுக்கு அதிகம் வியர்க்கும் பகுதியில் தடவினால், வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரிக்கள் அழிக்கப்பட்டு, உடலில் அதிகமாக வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும். ஆனால் ஷேவிங் செய்த பின்னரோ அல்லது அப்பகுதியில் ஏதேனும் காயங்கள் இருந்தாலோ, எலுமிச்சை சாற்றினை பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் கடுமையான எரிச்சலை சந்திக்க நேரிடும்.
பேக்கிங் சோடா சமையலறையில் காணப்படும் மற்றொரு பொதுவான பொருள் தான் பேக்கிங் சோடா. இது சமையல் பொருள் மட்டுமின்றி, சுகாதார பொருளும் கூட. இத்தகைய பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து நீர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பங்கு பேக்கிங் சோடாவுடன், 6 பங்கு சோள மாவு சேர்த்து கலந்து, அதை அக்குளில் பவுடர் போன்று தடவிக் கொள்ளலாம். இந்த வழி சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றது.
No comments:
Post a Comment