TOMATO உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தக்காளி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 17 July 2021

TOMATO உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தக்காளி !!

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தக்காளி !!



tomato


தக்காளி உணவிற்கு சுவையை மட்டும் அல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் தக்காளி புத்துணர்ச்சி அளிக்கும். எளிதில் சீரணமாகும்.

வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளனவயிற்றுக் கோளாறுகளிலும், ஈரல் கோளாறுகளிலும் நல்ல குணமளிக்கும். தக்காளியை சமைத்துண்டாலும், சூப் தயாரித்து உண்டாலும் உடல் வலுப்படும்.
 
அஜீரணம் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
 
ஒரு டம்ளர் தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து அதிகாலையிலேயே பருகுவது பித்தம், அஜீரணம், ஏரல் மந்தம், குடலில் மிதமிஞ்சிய வாயு உற்பத்தி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்
 
ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியும் கலந்து பருக வேண்டும். நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும்.
 
சிறுநீரகப் பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, ஈரல் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் தக்காளி சாருக்கு இருக்கிறது.
 
தக்காளியை அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். அதனுடைய கூழ்பகுதியை முகத்தில் தாராளமாகப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம்
 
தக்காளி பழம் சாப்பிடுவதால் உடலும், உள்ளமும் எப்போதும் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment