(tooth weakness)பல் ஆட்டம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

(tooth weakness)பல் ஆட்டம்

பல் ஆட்டம்


உடலில் சத்துக் குறைவே இதற்குக் காரணம், 'பல்லுப் போனால் சொல்லுப் போச்சு, சொல்லுப் போனால் சுகம் போச்சு" என்பார்கள். ஆகவே, பற்களை உடனே கவினிக்கவும்.

* கீரைகளும், பழங்களும் நிறைய சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, கொத்தமல்லிக்கீரை, பசலைக்கீரை, முட்டைக் கோஸ், ஆகியவை மிகவும் நல்லது. கொய்யாப் பழம், மாம்பழம், பப்பாளிப்பழம், காரட்டு ஆகியவையும் நிறைய சாப்பிட வேண்டும். மீன் எண்ணய் மற்றும் ஆட்டு ஈரலும் நல்ல பலன் தரும்.

*பல் உறுதியாக இருக்க, ஈறுகள் கெட்டியாக இருக்க வேண்டும். காலையில் பல் துலக்கியதும், ஆள்காட்டி விரலினால், பல் ஈறுகளை நன்றாக அழுத்தி விடவும். இதனால் ஈற்றில் இரத்த ஓட்டம் பெருகி, பல் உறுதிப்படும்.

* நல்ல பல்பொடியினால் பல் துலக்க வேண்டும். பொடி செய்யப்பட்ட உப்பு சிறந்த பல்பொடியாகும். உமிக்கரி சாம்பலையும், உப்பையும் கலந்து பல் துலக்குவது மிகவும் நல்லது. (உப்பு சேர்ப்பதால் முதலில் ஈறு வலிக்கும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்)

No comments:

Post a Comment